தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! நாளை முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்டிரல் - கன்னியாகுமரி, சென்டிரல் - செங்கோட்டை, சென்டிரல் - மங்களூரு, தாம்பரம் - கன்னியாகுமரி, கொச்சுவேலி - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் சிறப்பு ரெயில்(06005), மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(06006), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் நவம்பர் 2-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு செல்லும் சிறப்பு ரெயில்(06037), மறுநாள் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 3-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில்(06038), மறுநாள் காலை 11.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
* தாம்பரத்தில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில்(060499), அதேநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில்(060509, மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வரும் நவம்பர் 4-ந்தேதி மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில்(06039), மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 5-ந்தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரெயில்(06040), மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(23-ந்தேதி) காலை 8 மணிக்க தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.