புதுச்சேரியில் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்- விஜய் அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு, தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதலுடன், வருகிற 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள கழக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான பணிகளுக்காகத் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிகப் பொறுப்பாளர்களுடன் கழகத்தினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.