×

ஏ.ஆர்.ரகுமானின் கிட்டாரிஸ்ட் கணவரை பிரிவதாக அறிவிப்பு

 

ஏ.ஆர்.ரகுமானின் கிட்டாரிஸ்ட் கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி பிரிவதாக அறிவித்த சில மணி நேரத்தில், ஏ.ஆர்.ரகுமானின் குரூப்பில் உள்ள கிட்டாரிஸ்ட் மோகினிடே தனது கணவர் மார்க் ஹார்ட்சுக்கை விட்டு பிரிவதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர உள்ளோம். நாங்கள் எப்போதும் ஒன்றாக நன்றாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. இது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என மோகினி டே தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.