×

தமிழகத்தில் இருந்து வெளியேற திட்டமா? - சாமங் நிறுவன அதிகாரிகள் விளக்கம்..

 

சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ளா ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்நிறுவன தொழிலாளர்கள்  ஊதிய உயர்வு,  தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம்,  பணிநேர குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்.9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் அறிவித்தும் போராட்டத்தை தொடர்கின்றனர்.  இந்நிலையில்,  அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.  இதில் 14  அம்ச கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு  ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.   

ஆனால்  சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சிஐடியுவை பதிவு செய்வதை தவிர மற்ற அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக சாம்சங் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.  மேலும்,   சி.ஐ.டி.யூ பிரச்சனை  காரணமாக    2000 ஊழியர்களைக் கொண்ட சாம்சங் நிறுவனம் , தமிழ்கத்திலிருந்து வெளியேறி நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  உத்தரபிரதேசம், குஜராத் மற்றுய்ம்  ஆந்திர அரசும் சாம்சங் நிறுவனத்தை  தங்கள் மாநிலத்திற்கு  இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை என அந்நிறுவனம் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.  தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக samsung ஆலை வேறு மாநிலத்திற்கு செல்வதாக தகவல் பரவியதை அடுத்து விளக்கம் அளித்துள்ளார்