ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. 2 நாட்களாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் தற்போது பிரதீப்பை காவல்துறை கைது செய்தது. இவ்வழக்கில் இதுவரை பிரதீப்புடன் சேர்த்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.