வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்
Updated: Mar 16, 2025, 12:08 IST
இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்.
உடல்நலக்குறைவு காரணமாக இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்ததை அடுத்து, தற்போது அவர் நலம்பெற்று வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதி செய்துள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் என அறிக்கை வெளியிட்டுள்ளது.