×

கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக கவுன்சிலரை கைது செய்க - ராமதாஸ்  

 

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த  வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த  அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை  அதே ஊரைச் சேர்ந்த  திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இராஜீவ்காந்தி என்பவர் கடுமையாகத் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளைக் கூறியும் திட்டியிருக்கிறார். பணியில் இருந்த அரசு ஊழியரை திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.