×

உலக கோப்பை - வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்க தேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இதேபோல் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றூக்குள் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 44வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவுகித் ஹிரிடாய் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 177 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்கள் சேர்த்தார்.