திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்பட்ட விருதுகள்!
திமுக ஆண்டு விழாவுக்காக சுமார் 40 ஆண்டுகளாக கேடயம் தயாரித்து வழங்குபவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் கெளரவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, கழக முப்பெரும் விழா நாளை நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்வும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாவும் நடைபெறவது வழக்கம். இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெற்றுவருகிறது.
திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு 'பேராசிரியர் விருது' வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடு்த்து அவருக்கு பதிலாக அவரது பேத்தி ஜெயசுதாவுக்கு ‘பெரியார் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதேபோல் தி.மு.கழகத்தின் முப்பெரும் விழா, பவள விழாவில் ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக முப்பெரும் விழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு ‘மு.க.ஸ்டாலின் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கவிஞர் தமிழ்தாசனுக்கு ‘பாவேந்தர் விருது’ வழங்கப்பட்டது. மேலும் ‘அண்ணா விருது’ மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட்டது.