×

குழந்தையை கொன்ற குரங்கு : கூண்டுவைத்து பிடித்த வனத்துறை!

தஞ்சையில் குரங்கு ஒன்று குழந்தையை கொன்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகள் பிடிபட்டன. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜா – புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது ஓட்டை பிரித்து உள்ளே வந்த குரங்கு குழந்தை ஒன்று தூக்கி சென்று இருந்த குளத்தின் பக்கத்தில் இருந்த சுவற்றின் மீது வைத்து சென்றுள்ளது.
 

தஞ்சையில் குரங்கு ஒன்று குழந்தையை கொன்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகள் பிடிபட்டன.

தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜா – புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது ஓட்டை பிரித்து உள்ளே வந்த குரங்கு குழந்தை ஒன்று தூக்கி சென்று இருந்த குளத்தின் பக்கத்தில் இருந்த சுவற்றின் மீது வைத்து சென்றுள்ளது. அப்போது மற்றொரு குழந்தையையும் தூக்க குரங்கு வந்த போது, தாய் புவனேஸ்வரி பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குரங்கை துரத்தியுள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன மற்றொரு குழந்தையை தேடும்போது குழந்தை குளத்தில் விழுந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தஞ்சையில் குழந்தை இறப்பை தொடர்ந்து வைக்கப்பட்ட கூண்டுகளில் இதுவரை சுமார் 25 குரங்குகள் சிக்கின. ஓட்டை பிரித்து குரங்கு எடுத்து சென்ற 2 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்ததால் வனத்துறை கூண்டுகளை வைத்து பிடித்தது.