×

செங்கல்பட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பச்சிளங்குழந்தை மாயம்

 

மதுராந்தகம் அருகே பிறந்த பச்சிளம் குழந்தை வீட்டில் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெருகரனை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இருளர் தம்பதியினர் பாளையம்- கன்னியம்மாள். இவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி  21-ந் தேதி இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்பு மருத்துவர் ஆலோசனைப்படி இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இன்று விடியற்காலையில் 4 மணியளவில் எழுந்து பார்க்கின்ற பொழுது பச்சிளம் குழந்தை பிறந்த 6 - நாட்களில் வீட்டில் நல்ல நிலையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து பார்த்தபொழுது குழந்தை காணவில்லை என கூறியுள்ளனர். மதுராந்தகம்.டி. எஸ்.பி.,சிவசக்தி தலைமையிலான  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.