“இது வேகாத கறிங்க..” கேஎப்சி சிக்கனில் துர்நாற்றம்- வாடிக்கையாளர் வாக்குவாதம்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கனில் துர்நாற்றம் வீசியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே பிரபல துரித (KFC) உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று இரவு 8 மணி அளவில் பெருமாட்டு நல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கிரிஸ்பி சிக்கன் மற்றும் சிக்கன் பர்கர் உள்ளிட்டவற்றை சுமார் 929 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். தொடர்ந்து உணவுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் வாங்கிச்சென்ற கிரிஸ்பி சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் சிக்கன் சரியாக வேகாத நிலையிலும், சிக்கனில் எலும்பை கடித்தபோது அதில் கெட்ட வாடை வீசிய நிலையில் ரத்தம் உறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.