×

"சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்"- வானிலை ஆய்வு மையம்

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், “அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெதுவ்க நகர்ந்து கரையை கடக்கும். ஆகவே சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை. 


அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்க்கடல், ஆந்திரா கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.