×

போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்- 3 பேர் கைது

 

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது  தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமைத்தில் இரவு (16-9- 24 )இரவு 9-30 மணிக்கு தஞ்சாவூருக்கு புறப்பட்ட (செந்தில்)தனியார் பேருந்தில் மது போதையில் ஏறிய 3 பேர், பெண்கள் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இதையடுத்து அவர்களை நடத்துனர் விகாஸ் (23) வேறு இருக்கைக்கு சென்று அமருமாறு தெரிவித்துள்ளார். அப்போது இடத்தை மாற்றி அமர முடியாது என நடத்துனரிடம் மது போதையில் இருந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.