×

சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள்

 

சென்னையில் 75 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்க சன் மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தமிழகம் உட்பட நாடு முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத, மின்சாரத்தில் இயங்கும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்ய, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள், சில பெட்ரோல் பங்க்குகள் போன்றவற்றில், 'சார்ஜிங்' மையங்கள் உள்ளன. 

இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி சென்னையில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  இதன்படி சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்க சன் மொபிலிட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து போக்குவரத்து குழும அதிகாரிகளுடன் சன் மொபிலிட்டி நிறுவன அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.