×

திமுக - காங்கிரஸ் இடையே பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

 

திமுக - காங்கிரஸ் இடையே பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சு வார்த்தை சென்னை  அண்ணா அறிவிலாயத்தில் நடைபெற்றது.  இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு , ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில்  முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே பிப்ரவரி 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பிப். 9 மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.