×

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு  பாரத ரத்னா விருது - சசிகலா மகிழ்ச்சி 

 

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சசிகலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், நமது நாட்டின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர். வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்ததோடு உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்க இருப்பது தமிழ் மண்ணிற்கு பெருமை அளிக்கிறது.

அதேபோன்று நம் தேசத்தின் முன்னாள் பிரதமர்களான திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோரின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும் , நம் நாட்டு மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த மக்கள் நலப்பணிகளை போற்றிடும் வகையிலும் திரு.சரண்சிங் மற்றும் திரு.நரசிம்மராவ் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்க இருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது.