×

அண்ணாமலை தலைமையில் நாளை பாஜக நிர்வாகிகள் கூட்டம்

 

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில், நாளை (மே27) அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.