×

முதல்வர் ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் பேசினார்- அண்ணாமலை

 

தலித் தலைவர்கள் முதலமைச்சராக முடியாது என திருமாவளவன் கூரிய கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சென்னையில் நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன். இவ்விழாவை பாஜக அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. நாணய விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் என்னை அழைத்தார். திமுக நிர்வாகி பாஜக அலுவலகம் வந்து அழைப்பிதழ் வைத்தார். கலைஞர் ஐயா கருணாநிதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தே ஆக வேண்டும். கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பாஜக பங்கேற்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதலமைச்சராக வருவதற்கான சூழல் உள்ளது. இது கக்கன் ஐயா வாழ்ந்த பூமி. நல்லவர்களுக்கு இங்கே இடம் கிடைக்கும். விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடமிருந்து கூடுதல் சீட் பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசியுள்ளார்” என்றார்.