×

"திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்"- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

 

கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது இந்தக் கையாலாகாத திமுக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் திருமதி. நூர்ஜகான் அவர்களது மகன் திரு. ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.