×

எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை இல்லாததால் பாஜக தலைமை அதிருப்தி! திடீர் ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு

 

எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை நடக்காத நிலையில், வரும் 11ம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இரண்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை நான்கு. ஐந்து கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி பேரை இணைக்க இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை நடக்காத நிலையில், வரும் 11ம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், 10 லட்சம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய தலைமை, மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால், உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.