×

சேதமடைந்த அரசு பேருந்தில் பயத்துடன் இறங்கும் பயணிகள்! பாஜக சாடல்

 

“எமது கோபாலபுர வாரிசுகள் செல்வ செழிப்பில் வாழ்ந்தால் போதும்! சாமானிய மக்கள் எக்கேடு கெட்டாலும் - I don’t care!” - அப்படித்தானே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ““எமது கோபாலபுர வாரிசுகள் செல்வ செழிப்பில் வாழ்ந்தால் போதும்! சாமானிய மக்கள் எக்கேடு கெட்டாலும் - I don’t care!” - அப்படித்தானே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? பயணிகளின் பாதுகாப்பில்  எந்தவொரு அக்கறையுமில்லாமல், மிகவும் பழுதடைந்த பேருந்துகளை அமைச்சர் திரு. சிவசங்கரின் தலைமையின் கீழ் செயல்படும் போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது. அதில் ஒன்றாக இந்த படி சேதமடைந்த அரசு பேருந்தில் பயணிகள் பயத்துடன் கீழே இறங்கும் நிகழ்வானது, தமிழக அரசுப் பேருந்துகளின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுவே முக்கால் வாசி பேருந்துகளின் நிலையாக இருப்பது வேதனைக்குரியது.