×

விஜய்யை பார்த்து திமுகவினருக்கு பயம்- ஹெச்.ராஜா

 

முதல் மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “திருப்பதி லட்டு தயாரிக்க நெய் அனுப்பும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நெய்யில் கலப்படும் கண்டறிந்து இருப்பதால் அந்நிறுவனம்  மீது ஆந்திரா அரசு வழக்கு தொடுத்துள்ளது. ஆகவே அந்த நிறுவனம் நீதிமன்றத்தால் நிரபராதி என  தீர்ப்பு வரும் வரை தமிழகத்தில் எந்தவித கோவிலுக்கும் அந்நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வாங்க கூடாது. ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் பழனி முருகன் கோவிலுக்கும் தக்கராக உள்ளதால் அவரை உடனடியாக பதிவிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். கோடிக்கணக்கான இந்து மதத்தினர் உணர்வை காயப்படுத்தி உள்ள அவர் பழனி முருகன் கோவில் தக்காராக இருப்பதற்கு அருகதை இல்லாதவர் என்பதால் அவரை உடனடியாக அந்தப் பதிவில் இருந்து நீக்க வேண்டும்.

விஜய் வருகின்ற 27ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் திமுகவின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை  பிரதிபலிப்பதின் காரணமாக விஜய்யின் நகர்வு திமுக ஓட்டுகளை கலைக்கக்கூடும் என்பதால் திமுகவினர் பயப்படுகின்றனர்” என்றார்.