மது ஒழிப்பு மாநாடு ஒரு நாடகம்- எல். முருகன்
விருதுநகர் அருகே ரோசல்பட்டி குமராபுரம் இந்திரா காலனியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திங்களன்று மாலை ஆய்வு செய்தார். அப்போது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அரசு அலுவலர்களுடன் அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த சுகாதார வளாகம் மற்றும் வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம்குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ரோடு, ஜல்ஜீவன் திட்டம்,சரியாக நிறைவேற்றாமல்,குப்பையைக்கூட அல்லாமல் சுகாதாரக்கேட்டை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த போலி சமூக நீதி பேசும் போலி திராவிட மாடல் அரசு 2 நாட்களுக்குள் அப்பகுதி மக்களின் குறைகளை அரசு போக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் 17 நாட்கள் அமெரிக்க சென்று எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்காததால் மக்களை திசை திருப்ப திருமாவளவனை வைத்து மது ஒழிப்பு நாடகத்தை இருவரும் சேர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மனமகிழ் மன்றம் நடத்தி வருகின்றனர். பாஜக ஆளும் குஜராத்,பீகார் போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளளது.
பாஜக ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளது. பாஜக பெரும்பான்மை ஆளும் மாநிலங்கள் தவிர கூட்டணி ஆட்சி அமைத்த இடங்களில் ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். டேம்ர்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு ஒத்து வந்தால் கல்வி நிதி வழங்கப்படும். யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுங்களுக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். மிலிட்டரிக்கு எதிராக தேசத்திற்கு எதிரான கருத்துடைய பதிவுகளை அனுமதிக்க இயலாது. அடிப்படை சுதந்திரம் இருந்தாலும் கூட நாட்டு நலனுக்கு எதிரான இந்த விஷயத்தையும் அனுமதிக்காத வகையில் அந்த கட்டுப்பாடுகள் இருக்கும்” என்றார்.