கருணாநிதி நாணயத்தை வெளியிடவுள்ள பாஜக அமைச்சர்
Aug 12, 2024, 16:18 IST
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ம் தேதி மாலை 6.50 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், கருணாநிதி படம் பொறித்த ரூ.100 நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.