×

திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை- வானதி சீனிவாசன்

 

திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலாஜி, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மருத்துவர்கள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.