×

செப்.3-ஆம் தேதி அமெரிக்காவில் சனாதன நாள்- வானதி சீனிவாசன்

 

செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேட்டுச்சா  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு...  செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக அறிவித்த அமெரிக்க லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி!  அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார். இதுவே சனாதனத்தின் பெருமை! பறந்து உலகெல்லாம் விரிந்திருக்கும் சனாதனத்தின் பெருமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.