×

கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி - வானதி சீனிவாசன்

 

கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் முயற்சியால் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டு காலமாகியும்கூட அடிப்படை வசதிகளான கழிப்பிடம், கேஸ் இணைப்பு, இருப்பதற்கான நல்ல வீடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி. பல்வேறு உலக நாடுகள் அமைப்புகள் கூட, இந்தியாவில் எப்படி பெண்கள் தலைமை தாங்குகின்ற மாற்றம், முன்னேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி சிறப்பான கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.