நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் திமுக அரசு! பாஜக வரவேற்பு
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் #CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “"நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் #CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது. நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது" என்று இன்று தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
CLAT (Common Law Admission Test) தேசிய அளவில் சட்டக்கல்விக்கு பொது தேர்வு, அதாவது மருத்துவ கல்விக்கு தேசிய பொது தேர்வான NEET தேர்வு போன்றது. இதே போன்று, நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் சிறந்த மருத்துவர்களாக நமது தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக NEET தேர்வை வரவேற்று, சிறந்த முறையில் அவர்களுக்கு பயிற்சி வழங்க ஆவன செய்யவும். இனி NEET தேர்வை எதிர்க்க மாட்டார் என நம்புவோம்.
(குறிப்பு : தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு CLAT தேர்வு தேவையில்லை என்ற வாதத்தை இங்கு முன் வைப்பார்கள். ஆனால், நாம் ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? அனைத்து மாணவர்களுக்கும் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வாய்ப்பளிப்போம்)” எனக் குறிப்பிட்டுள்ளார்.