×

“ஆன்மீகம் இல்லாத அரசியல் எடுபடாது; விஜய் இறைவனை நாடி சென்றிருப்பது வரவேற்கத்தக்கது”- தமிழிசை

 

மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான நிதியை மற்றும் எதிர்பார்ப்பது சரியில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், “அண்ணன் ஹெச்.ராஜா தலைமையில் பாஜக குழு அமைத்திருப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். ஆளுநர் பதவி கேட்டிருந்தால் மீண்டும் கிடைத்திருக்கும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் கட்சிப் பணியாற்றுகிறேன். ஒருங்கிணைப்பு குழுவில் இடபெறாதது வருத்தமில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றது சுற்றுலாவுக்காகவா? முதலீட்டிற்காகவா? ஏற்கனவே இருக்கிற நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் போட்டு இருக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கான நிதியை மட்டும் மத்திய அரசிடம் கேட்டால் எப்படி..? அரசியல் செய்ய கூடாது. அரசியல் காரணங்களுக்காக புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை.

ஆன்மீகம் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லும் மாநிலத்திலிருந்து தனது கட்சி பணிக்காக விஜய் சீரடி கோயிலுக்கு நாடி சென்றிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழை பிரதமர் மோடி மதிக்கும் அளவிற்கு கூட இங்கே உள்ளவர்கள் மதிக்கவில்லை” என்றார்.