"தேமுதிகவின் வங்கி கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!!
Apr 4, 2024, 08:33 IST
மக்களவைத் தேர்தலையொட்டி ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி,அதிமுக தேமுதிக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் மருத்துவர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என மிரட்டினார்கள். அப்படி செய்தால் தேமுதிகவின் வங்கி கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை ஜெயலலிதா போல் எடுத்தேன்; அ.தி.மு.க., கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க., கொண்டுவந்ததாக சொல்கிறார் உதயநிதி. பா.ம.க., - பாஜக ., நம்முடன் இல்லாததற்கு கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றார்.