மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Jul 4, 2024, 10:01 IST
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்திய சிறப்பு படை போலீசார்நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.