#Breaking: பட்ஜெட் எதிரொலி : தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 சரிவு
Updated: Jul 23, 2024, 15:25 IST
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டுன் வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.2,080 குறைந்திருக்கிறது. அதேபோல் காலையில் கிராம் ரூ.8,810க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிராமுக்கு ரூ.260 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்படுகிறது.