×

#BREAKING: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமனம்!

 

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனாவின் பொறுப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பின்னர் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதேநேரம்   1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்படியே தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகானந்தம், முதலமைச்சரின் தனிச் செயலாளர்களில் ஒருவராவார். ஆம், முதலமைச்சரின் தனி செயலாளர்களாக 4 பேர் பதவி வகித்து வரும் நிலையில்,  அவர்களில் முதன்மைச் செயலாளராக இருந்தவர் ஆவார்.   இவரை தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

முருகானந்தம் அவர்கள் B.E.,கம்ப்யூட்டர் சயின்ஸ் இளங்கலை பட்டம் முடித்ததோடு, IIMல் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். தொடர்ந்து 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆட்சிப் பணிக்கு வந்தவர். தொடர்ந்து பல மாவட்டங்களில் ஆட்சியராகவும், பல்வேறு துறைகளில் ஆணையராகவும்,  முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக  நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் இருந்தபோது நிதித்துறை முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்தார். முன்னதாக   தொழில் துறை முதன்மைச் செயலாளர்களாகவும் அவர்  பதவி வகித்திருக்கிறார்.