×

பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த CA தேர்வு தேதி மாற்றம்

 

2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்படுவதாக, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தின. இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்த நிலையில், 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்படுவதாக, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம்  அறிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, தற்போது ஜனவரி 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  தை பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.