×

“முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த முடியுமா?” - அண்ணாமலை சவால்

 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக களம் இறக்கப்பட்டுள்ளார்.  அத்துடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  காலை முதல் இரவு வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் அண்ணாமலை பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்.  

தமிழகத்தில் அதிக அளவில் பாஜக எம்.பி.க்கள் வெற்றி பெறும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து தரப்படும் என்று  உறுதி மொழிகளை வீசி வருகிறார்.  வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை இந்தி  மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் கோவையில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை , முதல்வர் வீதிக்கு வந்தால் மக்கள் அவர் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.  முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும்.  ஆனால் அவர் வருவதில்லை.  முதல்வரை ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்க்கலாம்.  தமிழகத்தின் ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து 10 கிலோமீட்டர் வரை அவரே ஒரு ரோடு ஷோ வரட்டும். எத்தனை பேர் முதல்வரை காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். நான் சவால் விடுகிறேன் என்று தெரிவித்தார்.