×

காவிரி ஆற்றுப் பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..  

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். தொழில் நிறுவனம் நடத்தி வரும் இவர், தனது வேலைகளை முடித்துக்கொண்டு ஈரோட்டில் இருந்து  திருச்செங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.  தனது 2013 மாடல் மாருதி  காரில் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது,  கார் திடீரென நடு வழியில் நின்றுள்ளது. இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய செந்தில் குமார்,  கார் முன்பக்க பேனட்டை திறந்து பார்த்த பார்த்துள்ளார்.  

அப்போது லேசான புகை வெளியேறியதோடு  திடீரென முன்பக்க பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் வேக வேகமாக காரின் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். இதன் காரணமாக தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . தீ விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியாத நிலையில் இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை வருகின்றனர்.  சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.