×

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு

 

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


சென்னை மாநகராட்சியில் கடந்த 2018-ஆம் அண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 1 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு எழுந்ததாக எஸ்பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சென்னை,  கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக 800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஸ் பி வேலுமணி அதை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடதக்கது.