×

பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய கடை மேலாளர் மீது வழக்குப்பதிவு.. 

 


கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய கடையின் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகம் சார்பில் நேற்று முன்தினம் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில்  அரை மணிநேரத்திற்குள் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல்  4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு  ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனையறிந்த ஏராளமானோர் கடை முன் குவிந்து   போட்டியில் கலந்து கொண்டனர். 

இதில் ஆட்டிசம் பாதித்த தன் மகனின் மருத்துவ செலவுக்காக கலந்துகொண்ட, கணேசமூர்த்தி என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 4 பிரியாணி சாப்பிட்டு ரூ. 50,000 வென்றிருந்தார். 

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்த எவ்வித முன் அனுமதியும் இன்றி பொது இடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்குப்  போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை இணைக்கக்கூடிய முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.