×

அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு

 

மதுரையில் திமுக வழக்கறிஞர் அணி அளித்த புகாரின்பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பரிசு அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுரையில் திமுக வழக்கறிஞர் அணி சாமியார் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா, அவரது வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட  பியூஸ்ராய்  ஆகிய இருவர் மீதும் 153, 153A (1)(a),504,505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு. செய்யப்பட்டுள்ளது.