×

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்..

 


காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்காக பங்கீடை முறையாக திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  அதன்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 7,329 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.  இதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில்,  காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  அத்துடன் கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.