தமிழகம் மீண்டுமொரு அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி பயணிக்கிறது - எல்.முருகன்
Feb 27, 2024, 16:00 IST

தமிழகம், மீண்டுமொரு அரசியல் மாற்றத்தை எதிர் நோக்கி பயணிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற, என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலம், தமிழக மக்களின் மனதில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் பொற்கால ஆட்சி குறித்த நல்லெண்ணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்கள் கொடுத்த வரவேற்பு என்பது, எதிர்வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலிருந்தும், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் மக்களவையில் ஒலிக்கும் என்பதற்கான புத்துணர்ச்சியை தந்துள்ளது.