×

இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

 

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் தமிழகத்தில் இன்று (31-08-2024) வேலூர்,திருவண்ணாமலை,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர்,   நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  திருவள்ளூர், திருப்பூர், தேனி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.