×

இயக்குநர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! அமலாக்கத்துறை அதிரடி

 

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் வியாபார கூட்டாளி அமீர் மீது இன்று போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கையில் 12-வது நபராக இயக்குநர் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமான பணத்தை இயக்குநர் அமீர் கையாண்டதாக குற்றப்பத்திரிக்கையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தியதாக பதிவான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாபர் சாதிக்கும் ஒருவராவார். இதையடுத்து ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் ஹோட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.