×

4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. அதிமுக மாஜி எம்.எல்.ஏ. வழக்கை தூசிதட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை..  

 

 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு உறுதியளித்துள்ளது.  

தியாகராயர் நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ₹2.64 கோடி சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதி ₹35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் ன்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  

அதில்,  சத்யா (எ) சத்யநாரயணன்  மீது  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும்,  இந்த வழக்குகளின்   விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.  வழக்குகளின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும், வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.  

இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ்  இந்த வழக்குகளில் மீதான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், நான்கு மாதத்திற்குள்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.