×

 சதுர்த்தி விழா: விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு..  

 


தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்ற வருகிறது. 

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10வது நாளான இன்று பிற்பகலில் 21 படி அரிசி,  வெல்லம் சேர்ந்து மெகா கொழுக்கட்டை விநாயகருக்கு படையலிடப்பட உள்ளது.  இதனை ஒட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  டாக்டர்கள் நீண்ட வரிசைகள் காத்திருந்து பிள்ளையார் பட்டி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். 

இதேபோல் கோவை புளியங்குளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விமரிசையாக நடைபெற்றது. இது ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட 190 டன் எடை கொண்ட  மிகப்பெரிய  விநாயகர் சிலை ஆகும்.  சதிர்த்தி விழாவை முன்னிட்டு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசைகள் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றன.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 50 கிலோ சந்தன காப்பு இடப்பட்டு,  2 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் புளியங்குளம் விநாயகரை தரிசிக்க குவிந்து வருகின்றனர். 

null


இதேபோல் புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தேவஸ்தானம் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,  மூலவருக்கு அமெரிக்க டைமண்ட் கவசம் அனுபவிக்கப்பட்டது.  காலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  சந்தனம், பன்னீர், பால், விபூதி, பால், தயிர், தேன், குங்குமம் உள்ளிட்ட 21 பொருட்கள் மூலம் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிள்ளையாரை தரிசிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.