×

"மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" நாளை வரை கெடு

 

மகாவிஷ்ணு விவகாரம் அசோக் நகர் பள்ளியில் இன்று ஆசிரியர்களிடையே பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நடத்திய விசாரணையில் இன்னும் ஒன்று இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளி  கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


மகா விஷ்ணு விவகாரம், அசோக் நகர் பள்ளியில் ஆசிரியர்களுடன் விசாரணை மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த வாரம் 28.8.2024 அன்று அசோக் நகர் பள்ளியிலும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளும் நடைபெற்ற சொற்பொழிவு கூட்டத்தின் அடிப்படையில் அரசு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விசாரணை செய்து அறிக்கை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் அன்றும் இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து இன்னும் ஓரிரு நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசு தனியாக ஒரு குழுவினை அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்து இரண்டு அல்லது மூன்று தினங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும். மூன்று தினங்களுக்கு சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது. முதல் நாள் வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்பட்டது. இன்று இரண்டாவது நாள் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது, இன்னும் ஒரு நாள் இருக்கிறது இந்த நிகழ்வு சம்பந்தமாக உள்ள மீதமுள்ள நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்


மகாவிஷ்ணு விவகாரம் நிகழ்ச்சி தயார் செய்தவர் யார் என்பது குறித்து அறிக்கையில் தெரியவரும். தலைமை ஆசிரியருக்கு நாளை காலை வரை விளக்கம் அளிக்க கெடு அளிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மை சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்...  1. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார்?2. அனுமதி வழங்கியது யார்?இந்த கேள்விக்கு பதிலளிக்க  பள்ளி கல்வி துறை இயக்குனர் கெடு வழங்கியுள்ளார்” என்றார்.