×

வாகனங்களை பறிமுதல் செய்யும் முன் நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.. 

 

சென்னை மாநகர  சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும்  வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையான நோட்டீஸ் அளித்து பறிமுதல் செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார்  உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்து ஏலவிடப்படும்  என ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையாக நோட்டீஸ் அளிப்பதில்லை, வாகனத்தை பறிமுதல் செய்த  பின்னர் அபராதம் செலுத்தி மீட்டால் வாகனத்தை சேதப்படுத்தி திரும்ப ஒப்படைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  

இதன் காரணமாக  15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு, அதன் உரிமையாளருக்கு  முறையான நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பி அதன்பின்னர் ஒரு வார காலத்திற்குள் வாகனங்களை எடுக்கவில்லை எனில் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.