×

ரெட் ஸோனாக(RED ZONE) அறிவிக்கப்பட்ட சென்னை.. 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..  

 

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் முதலமைச்சர் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரை ட்ரோன்கள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “17வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் அவர்கள் 15.08.2024 அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளார். 1973ம், ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன் கீழ் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ். ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 08.08.2024 முதல் 23.08.2024 வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. 

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு, சென்னையில் 14.08.2024 மற்றும் 15.08.2024 ஆகிய இரு நாட்களிலும், (அரசு ஏற்பாடுகள் தவிர) i).தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ii).மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.