×

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்...மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை...!

 

சென்னையில் மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தர்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூர் அருகே உள்ள மருத்துவ கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மருத்துவ கல்வி பயின்று வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், காதலி கைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார் ரிஷிகேஷ். இந்த நிலையில், மருத்துவ கல்லூரி விடுதியில் ரிஷிகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் சடலம் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி வார்டன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மருத்துவ கல்லூரி மாணவர் ரிஷிகணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.